சுகுணா விலாஸ்- ஸ்பெஷல் பெ(ஸ)ரட்டு - By கி.அ.அ.அனானி
நம்ம கி.அ.அ.அனானி அய்யா(!) எந்தப் பதிவையோ பார்த்து impress(!) ஆகி, நேற்று ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பினார். படிக்க ஆரம்பிச்சா, நான் நினைக்கிற 'பதிவுக்கும்', கி.அ.அ.அ அனுப்பின மேட்டருக்கும் சம்பந்தம் இருக்கற மாதிரி தெரியலே, ஒரு எழவும் வெளங்காம, அவரது மேட்டர முழுக்க படிச்சுப் பார்த்தவுடன் நம்ம சிற்றறிவுக்கு கி.அ.அ.அனானி உட்ட 'சூப்பர் பஞ்ச்' வெளங்கிச்சு :)
சுகுணா விலாஸில் எல்லா ஐட்டமுமே சுவையா இருக்கும்;-)
கி.அ.அ.அ மேட்டர் பதிவாகக் கீழே, என்சாய் :)
***********************************************************************
நேற்றிறவு 8.00 மணிக்கு KTV-யின் 'நான் ஸ்டாப்' கொண்டாட்டம் "சூப்பர் ஹிட்" இரவுக்காட்சியில் சத்தியராஜ் நடித்திருந்த "வீரப்பதக்கம் " தமிழ் சினிமா பார்த்தேன்.டைட்டில் போடும் போது ஏதோ தொலைபேசி அழைப்பு வந்துவிட்ட படியானல் யார் இயக்கிய படம் என்றெல்லாம் பார்க்கவில்லை . தயாரிப்பு ராமனாதனாம்.
சரி கதைக்கு வருவோம்.
சத்திய ராஜ் படத்தில் "கலிவரதன்" . தாழ்த்தப் பட்ட சாதியில் பிறந்தவர் ( அவரே சொன்ன டயலாக்குதாங்க..ஏதோ நான் கண்டு புடுச்சு எழுதலை)அப்பா வினுசக்கரவர்த்தி அவரை வீரனாக வளர்க்கிறார் என டைடில் சாங்கிலேயே காட்டி முடித்து விடுகிறார்கள்,,,கலிவரதன் மாநிலத்திலேயே முதலாவதாக, (பயிற்சி போட்டிகளில்) தேர்வு பெற்று " கான்ஸ் கலியாக" ஆகி விடுகிறார். அதாங்க கான்ஸ்டபிள் கலிவரதனின் சுருக்கமாம்..வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அந்த துறைக்கான நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு பொறுப்பாக சப் இன்ஸ்பெச்டர் வீட்டுக்கு தண்ணீர் சுமந்து , காய்கறி வாங்கிக் கொடுத்து, கூடுதல் பூண்டு தட்டிப் போட்ட மசால் வடையுடன் டீ வாங்கிக் கொடுத்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவியின் மனம் கவர்ந்த "கான்ஸ்" ஆகிறார். சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியை இவர் "அண்ணி" என்றும் அவர் இவரை " கொழுந்தனாரே " என்றும் கூட கூப்பிட்டுக் கொள்கிறார்கள்.
எப்பொழுதும் தனது முன்னேற்றம் ( குறுக்கு சந்தில் புகுந்தாவது) பற்றியே சிந்திக்கும் "கான்ஸ்" கலிவரதன் அதற்காக தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் மாமன் பெண் ராதிகாவை கூட மணக்க மறுத்து விடுகிறார்.மனம் நொந்த ராதிகா தந்தை பேச்சு தட்டாமல் மில்லில் வேலை பார்க்கும் தொழிளாளி கம் நேர்மையான யூனியன் லீடர் "நிழல்கள் ரவியை" மணந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுக்கிறார்.
சரியாக மேடையில் பேசக்கூட தெரியாத மந்திரி மகள் "ஊர்வசி" எம் எல் ஏ எலெக்க்ஷனில் (இடைத்தேர்தலாகத்தான் இருக்க வேண்டும்) நிற்க அவருக்கு எப்படி பேசி மக்களை கவர வேண்டும் என்று "கான்ஸ் கலி"யான சத்தியராஜ் லெட்டெரெல்லாம் போடுகிறார்.அதைப் படிக்கும் ஊர்வசி அப்புறம் மேடையில் பேசுவதே இல்லை ..அதனால் அந்த அறிவுறையை என்ன செய்தார் என்று இன்னும் எனக்கு புரிந்தபாடில்லை :)))
இது இப்படியிருக்க பிரபல கேடி ரகுவரனை ( "வல்கனைசிங்" வடிவேலுவோ ஏதோ பெயர் ...ஞாபகமில்லை ) பிடிக்க போலிஸ் அரஸ்ட் வாரண்ட் இருக்க சப் இன்ஸ்பெக்டருக்கு அதைப் பற்றி பேசும் போதே கை காலெல்லாம் ஆட்டம் காண்கிறது...மெய்யாலுமே அப்படிக் காட்டுகிறார்கள்..பிலிவ் மீ..எந்த போலிஸ¤ம் ரகுவரனை பிடித்து வர தயாராக இல்லாத நிலையில் " நாம் பிடித்து வந்து நல்ல பெயர் வாங்கலாம்" என முடிவு கட்டி நம்ம சத்தியராஜ் அங்கு போகிறார்.... அப்போது ஊர்வசியின் அப்பா அமைச்சர் அங்கு வந்து ரகுவரனிடம் மார்கெட் ப்ளேஸில் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல, ரகுவரன் ஒரு சவுண்டு விட, மார்கெட் ப்ளேஸ் போட்டது போட்டபடி காலியாகிறது...சத்தியராஜை தவிர.
இப்போது அமைச்சரும் ரவுடி ரகுவரனும் தனியாக பேசுவதை சத்தியராஜும் கூட இருந்து கேட்கிறார்..அதாகப்பட்டது அமைச்சர் மகள் ஊர்வசி எம் எல் ஏ எலெக்ஷன்ல நிக்குறார் இல்லையா ...அந்த எலெக்ஷன்ல எதிர்கட்சி சார்பா நிக்குற ஆளை எதிர்க் கட்சியே போட்டுத்தள்ள ப்ளான் போட்டிருக்காம்.. " அதுனால எலெக்ஷன் கான்சலானால் அமைச்சர் மகள் ஜெயிக்க முடியாதுல்ல " அதுனால எதிர் கட்சி வேட்பாளருக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லி ரகுவரன் கிட்ட அமைச்சர் கேட்கிறார்..அதுக்கு ரகுவரன் எனக்கு இன்னா...என்று கேட்டு ...அப்புறம் நானும் பாலிடிக்க்ஷ¤க்கு வரணும் அதுனால வட்ட செயலாளர் போஸ்டு வேணும் என்று கேட்க நம்ம "கான்ஸ்" சத்தியராஜ் "இந்த "மாஸ்டர் ப்ளான் " ?! ஒர்க் அவுட் ஆகணுமின்னா நானு இப்ப ரகுவரனை அரஸ்டு பண்னக் கூடாது...அதுக்கு எனக்கு இன்ஸ்பெக்டர் போஸ்ட் வேணும் என்று பேரம் பேசுகிறார். ப்ளான் சக்ஸசாகாதோ என்று பயந்து நடுங்கி அமைச்சரும் வாக்கு கொடுக்கிறார். எலக்க்ஷன் முடிந்து ஊர்வசி ---எம் எல் ஏ, ரகுவரன் ---வட்ட செயலாளர் & சத்தியராஜ்---இன்ஸ்பெச்டராகிறார்கள்.
தான் கான்ஸ் ஆக இருந்த ஸ்டேசனிலேயே இன்ஸ்பெக்டராகும் சத்தியராஜ் முன்னாளில் தான் பணிவிடை செய்த (இன்னும் அப்படியே) சப்இன்ஸ்பெக்டராக இருப்பவரை மற்றும் அவர் மனைவியை ஏக வசனத்தில் பேசி அதட்டி உருட்டுகிறார்..
இப்படியாக இருக்கும் போது மார்கெட் பிளேசில் ஒரு கொலை நடப்பதாக தகவல்..அதை விசாரிக்க போகும் போலிஸ் திரு திரு வென்று விழித்துக் கொண்டிருக்க "புத்திசாலி" சத்திய ராஜ் அங்குள்ள ஒரு வாட்ச் மேனிடம் விசாரித்து அவர் சொன்ன " கொலை செய்தவன் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி கட்டி குங்குமம் வீபுதியெல்லாம் வைத்திருப்பான் " என்ற பிரத்தியேக அடையாளங்களை வைத்து கொலையாளியை ஒரே நொடியில் (பக்கத்திலிருக்கும் போலிஸிடம் கேட்டு )கண்டு பிடித்து கொலைக்கான காரணத்தையும் ஊகித்து நேரே மந்திரி, ரகுவரன் & கோவிடம் போய் அரஸ்ட் வாரண்ட்டை ஆட்டுகிறார்..அதாவது ஏழு மில்களின் பங்குகளை சுருட்ட 24 வயதே நிரம்பிய அந்த மில்லின் உரிமையாளரை ஆள் செட் பண்ணி போட்டுத் தள்ளி விடுகிறார்களாம்..அதை தன் மதியால் கண்டு பிடித்த சத்தியராஜ் இப்போது பேரம் பேசி " டி எஸ் பி " ஆகி விடுகிறார்.
இப்படி அபகரித்த மில்லில் ஸ்ட்ரைக் நடக்கிறது..யூ ஆர் ரைட்...நிழல்கள் ரவி தலைமையில்..இதை அடக்க முடியாமல் நிர்வாகம் தடுமாறி டி எஸ் பி சத்தியராஜிடம் யோசனை கேட்க அவர் யோசனையும் சொல்லி பரிசாக கேட்பது மந்திரி மகள் " மந்திரி ஊர்வசியை" (மனைவியாக).மந்திரியும் ஒத்துக் கொள்கிறார்.சத்தியராஜ் தனது யோசனையை மந்திரி & கோவிற்கு கதை வழியாக விளக்குகிறார்..அதாவது திருவிழாவில் குழந்தை எனக்கு மிட்டாய் வேணும் பொம்மை வேணும் என்று அடம் பிடிக்குமாம்..அதே குழந்தை அம்மாவை விட்டு மிஸ்ஸாகி விட்டால் யார் எதை வாங்கித் தருகிறேன் என்று சொன்னாலும் எனக்கு அதெல்லாம் வேண்டாம் அம்மாதான் வேண்டும் என்று கேட்குமாம்..அது மாதிரி மில்லை இழுத்து மூடினால் தொழிலாளர்கள் எங்களுக்கு போனஸ் வேண்டாம், சம்பள உயர்வு வேண்டாம்..வேலை இருந்தால் போதும் என்று சொல்லி விடுவார்களாம் " அதன் படியே மில்லை மூட தர்ணா செய்யும் தொழிலாளர்கள் மீது லத்தி சார்ஜ், ஷ¥ட்டிங் ஆர்டெரெல்லாம் கொடுக்க " யூ ஆர் அகைன் டெட் ரைட் ஜென்டில் மென் " அதில் இறப்பது நிழல்கள் ரவி.... ராதிகா கழுத்திலிருந்து தாலி இறங்க ஊர்வசி கழுத்தில் தாலி ஏறுகிறது ( சத்தியராஜ் கட்டுகிறார்) !!!!!!!!
என்ன மக்களே...ரெஸ்ட் வேணுமா இன்னும் பாதிக் கதை கூட முடியலை... அதுக்குள்ளேயேவா..
யாருக்காவது இந்தக் கதையின் தொடர்ச்சி மற்றும் முடிவு பற்றி மண்டைக் குடைச்சல் , ஆர்வக் கோளாரால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் பின்னூட்டம் வாயிலாக தெரியப் படுத்தவும் ...அடுத்த பதிவில் சொல்லத் தயார்.ஆனால் அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கும் இன்ன பிற கேடுகளுக்கும் (ரத்த அழுத்தம், மலச்சிக்கல் ...) நான் பொறுப்பேற்க முடியாது.
பின் குறிப்பு : என்ன மக்கா, தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லையின்னு பாக்குறீங்களா :)
"சிலரின், அதி புத்திசாலித்தனமானதாக (அவர்களே!) நினைத்துக் கொண்டு எழுதப்படும், உளறல் மற்றும் காழ்ப்புணர்வு 'மிதக்கும்' பதிவுகளை படிப்பதை விட "வீரப்பதக்கம்" போன்ற படம் பார்ப்பது எவ்வளவோ மேல்" என்ற என் கருத்தை ஸ்டாரங்காகப் பதிய மட்டுமே இந்தப் பதிவு. நேரடியாக பதில் சொல்லியோ, நான் குறிப்பிடும் "பதிவுக்கு" லிங்க் எல்லாம் குடுத்தோ உங்கள் நேரத்தை மேலும் வீணடிக்கப் போவதில்லை..
கி.அ.அ.அனானி
************************************
கி.அ.அ.அ மனசில யாரு, அவருக்கு என்ன பேரு ?????
(இது எ.அ.பாலாவோட மனதில் எழுந்த கேள்வி :)))))))) கண்டுபிடிக்கிறவங்க நிச்சயம் கிராண்ட் மாஸ்டர் தான் ;-)
*** 325 ***
10 மறுமொழிகள்:
Test comment :)
முதலில் வீரப்பதக்கம் பற்றி. கடைசியில் சத்யராஜ் திருந்தி போலீசுக்கு எதிராகவே செயல்படுகிறார்.
மற்றப்படி கி.அ.அ. குறிப்பிட்டது மிதக்கும் வெளியா? ஆனால் அவர் நினைப்பது போல இவர் இல்லையே. மிதக்கும் வெளி நல்லவராயிற்றே. நானே நேரில் பார்த்தவன் என்ற முறையில் நிஜமாகவே கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாலாஜி அவர்களே
பதிவை பதிப்பித்தமைக்கு நன்றி.
அய்யா டோண்டு அவர்களே,
நான் இந்தப் பதிவில் யாரையும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ சொல்லவோ அல்லது விவரிக்கவோ இல்லையே..அப்புறம் நான் ஏதோ நினைப்பதாக ஏன் இந்த assumption பின்னூட்டம்.
இது கொஞ்சம் கே வாக இருக்கிறது.
""நானே நேரில் பார்த்தவன் என்ற முறையில் நிஜமாகவே கூறுகிறேன்"""
நீங்கள் நிஜம் என்று சொன்னால் கொஞ்சம் கிலி அடிக்கிறது.
Enjoy pathivu & keep going :) (i.e if at all you liked this)
கி.அ.அ.அனானி
//மிதக்கும் வெளி நல்லவராயிற்றே. நானே நேரில் //
டோண்டு அய்யா,
நீங்க, வெளியே மிதக்கும் அய்யாவையும், குழந்தை என்று சொல்லப் போறீங்களா?ஏதேது ,விட்டாக்க நீங்க இடி அமீனைக் கூட குழந்தை என்று சொல்லி சாக்லேட் வாங்கி கொடுப்பீங்க போலிருக்கு.
பாலா
மிஸ்டர் . டோண்டு , நீங்க யாரை கெட்டவர்ன்னு சொல்லுவீங்க ? விடாத பிளக்கை கூட நல்லவர்னு சொல்றீங்க , நல்லவர்களுக்கு உங்க அளாவு கோல் அதுன்னா போதையில் மிதக்கறது கூட நல்லதே
பாலா ,
அந்த பொண்வண்டு பிரியாணி மேட்டரை விட்டுட்டீங்களே ?
One more TEST comment ;-)))
கரு மூர்த்தி அய்யா,
//பாலா ,
அந்த பொண்வண்டு பிரியாணி மேட்டரை விட்டுட்டீங்களே //
அடேடே, ஆமாம்;இந்த குழந்தைக்கு பொன்வண்டு ரொம்ப பிடிக்கும்.அப்படியே சாப்பிட்டுவிடும்,ஹார்லிக்ஸ் போல.தவிர, பிறக்கும் போதே,நவீனமான பின்புறத்தோட பிறந்த குழந்தை இது.அப்படி என்ன தான் நவீனம் என்று கேட்கிறீர்களா?பிறக்கும் போது, எல்லா குழந்தைகளுக்கும் மச்சம் ஒண்ணு ரெண்டு இருக்கும்.ஆனா இந்த குழந்தைக்கு,பின் புறத்தில் ஒரு பாகத்தில் வெள்ளை தாடிக்காரர் மூஞ்சியும்,இன்னொரு பாகத்தில் குறுந்தாடி வைத்த ஒரு ரஷ்ய மூஞ்சியும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.எல்லாக் குழந்தைக்கும் முதல் பேச்சு அம்மா என்று இருந்தால்,இந்த குழந்தை பேசிய முதல் வார்த்தை விஸ்கி.மொத்தத்தில், தெய்வப் பிறவி தான்.
பாலா
பாலா,
ஏதோ என் பேரைச் சொல்லி சந்தோசமா இருந்தா சரி. ஆமாம், இந்த பின்னூட்டம் பாலாவிற்கும் உங்களுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா? (ஐ மீன்.. ஒண்ணுவிட்ட, ரெண்டு விட்ட சம்திங்?). அப்புறம்..
/மிதக்கும் வெளி நல்லவராயிற்றே. நானே நேரில் பார்த்தவன் என்ற முறையில் நிஜமாகவே கூறுகிறேன்./
இதென்னடா இது பயமாயிருக்கு? இதுக்கு 'வீரப்பதக்கம்' படமே பார்த்துடலாம்போல.
varukai thanthu karuththkkaLai sonna naNbarkaLukku nanRi
--- BALA
Post a Comment